×

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட முருகன் கோயில் சுற்று சுவர் அமைக்க அளவீடு பணி துவக்கம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் திருவள்ளூர் நகர், தபால் தெரு, மேட்டு தெரு, கோட்டக்கரை, காட்டுக்கொள்ளை தெரு, விவேகானந்த நகர், கங்கன் தொட்டி, கோரிமேடு, மேட்டு காலனி, வெட்டுகாலனி, சரண்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவள்ளூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு, மேற்கண்ட கிராமவாசிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் முருகனை வழிபடுவது வழக்கம். இதையொட்டி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்தக் குளம் சில ஆண்டுகளாக தூர்வரப்படாமலும் அதை சுற்றியுள்ள சுற்று சுவர் இடிந்து விழுந்து மரண பள்ளங்கள் போல் காட்சியளித்தது. இது சம்பந்தமாக மேற்கண்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர் பலமுறை இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இந்த மேற்கண்ட முருகன் கோயில் சுற்று சுவர் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நேற்று 4 பேர் கொண்ட குழுக்கள் சுற்றுச்சூழல் அமைப்பதற்கான அளவீடு பணியை செய்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் நிருவர்கள் கேட்டதற்கு சுற்று சுவர் அமைப்பதற்கான அளவீடு மற்றும் தொகை எவ்வளவு ஆகும் என எஸ்டிமேட் போட்டு அரசுக்கு அனுப்பப்படும், சுற்று சுவர் கட்டும் பணி ஓரிரு மாதங்களுக்குல் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட முருகன் கோயில் சுற்று சுவர் அமைக்க அளவீடு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Murugan temple ,Kummidipoondi ,Tiruvallur Nagar ,Thapal Street ,Mettu Street ,Kottakarai ,Kattupagai Street ,Vivekananda Nagar ,Murugan ,Kummidipoondi Municipality ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...